News November 15, 2025
பிஹார் ‘சிங்கம்’ தோல்வி

பிஹாரில் 2 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட ஷிவ்தீப் லண்டே தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பணி காலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால், பிஹாரின் ‘சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்து, அராரியா மற்றும் ஜமால்பூர் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் தோல்வியடைந்தார்.
Similar News
News December 13, 2025
புதுவை: மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை

புதுச்சேரி, ஊசுட்டேரியில் நேற்று பெலிகான் பறவை (கூழைக்கடா) ஒன்று மீன் வலையில் சிக்கி தண்ணீரில் தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் ஏரியில் மீன் வலையில் சிக்கி தவித்த பெலிக்கான் பறவையை மீட்டு, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு வனத்துறை மருத்துவர் குமரன் பறவைக்கு சிகிச்சை அளித்தார்.
News December 13, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் விலை ₹6,000 குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்தநிலை நிலவி வரும் நிலையில், வெள்ளி விலை 1 அவுன்ஸுக்கு $2.28 குறைந்து $61.96-க்கு விற்பனையாகிறது. அதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் <<18544017>>நேற்று வரலாறு காணாத உச்சம்<<>> தொட்டிருந்த வெள்ளியின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ₹6,000 சரிந்து ₹2,10,000-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ₹1 கிராம் ₹210-க்கு விற்பனையாகிறது.