News May 13, 2024
பிளாக்கில் IPL டிக்கெட் விற்ற 10 பேர் கைது

சென்னையில், பிளாக்கில் IPL டிக்கெட் விற்ற 10 பேர் நேற்று (மே.12) கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இதில் பிளாக்கில் டிக்கெட் விற்றதாக 10 பேரை கைது செய்த திருவல்லிக்கேணி போலீசார், 27 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
2026-இல் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்-இ.பி.எஸ்

சென்னை, வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி பேசி பேசினார். அதில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 43 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகளை இழந்ததால் தான், நாம் ஆட்சியை இழந்தோம். எனவே, இதை மாற்றுவது பெரிய விஷயமல்ல. நம்மிடம் சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். நிச்சயம் இந்த முறை நாம் தான் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்தார்.

ஆட்சியில் பங்கு இல்லை: தம்பிதுரை

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு & பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார். அதிமுக தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது” என்றார்.