News August 5, 2024

பிளஸ் – 1 மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு

image

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 2,169 மாணவர்கள் தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 16, 2026

குமரி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

குமரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 16, 2026

குமரியில் 16 வயது சிறுவன் பரிதாப பலி..!

image

வடக்கு சூரங்குடியைச் சேர்ந்தவர் வினிஷ் (16). இவர் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு நண்பர்களுடன் கார்த்திகை வடலி குளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவர் குளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

News January 16, 2026

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (06160) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜன.18 (ஞாயிறு) அன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக திங்கள் காலை 4 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!