News April 1, 2025
பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலந்துறையார் கோயில்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ளது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் கோயில். இங்குள்ள மூலவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி ஆவர். சிவபெருமானை பிரிந்து சென்ற பார்வதி தேவி இங்கு தவம் செய்து மீண்டும் சிவபெருமானுடன் சேர்ந்தார். ஆகையால் இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியரும் சேருவர் என கூறுகின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் மாத்ருஹத்தி தோஷம், திருமணத் தடை போன்றவையும் நீங்கும் என்கின்றனர். இதை பகிரவும்
Similar News
News January 18, 2026
அரியலூர் மக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

அரியலூர் மாவட்ட மக்களே! உங்கள் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை மற்றும் அது என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா?
1. நகராட்சிகள்
அரியலூர்
ஜெயங்கொண்டம்
2. பேரூராட்சிகள்
உடையார்பாளையம்
வரதராஜன்பேட்டை
3. ஊராட்சி ஒன்றியங்கள்
செந்துறை
ஆண்டிமடம்
ஜெயங்கொண்டம்
அரியலூர்
தா.பழூர்
திருமானூர்
இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!
News January 18, 2026
அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலார்கள் நலவாரியத்தின் மூலம் உதவித்தொகை பெற்று அல்லது பெற விண்ணப்பித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அரியலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தரிவித்துள்ளார்.
News January 18, 2026
அரியலூர்: கார் விபத்தில் தாய் மகன் பலி – சோகம்

அரியலூர் சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் – ஜெயப்பிரியா. இவர்கள் காரில் மகன் தஸ்வின்(3) மற்றும் 11 மாத குழந்தை தர்ஷினியுடன் பெருந்துறை நோக்கி சென்றுள்ளனர். அப்போது சென்னை சென்ற கார் சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதி, சுரேஷின் கார் மீது மோதுயுள்ளது. இந்த விபத்தில் ஜெயப்பிரியா மற்றும் தஸ்வின் சம்பயிடத்திலே பலியாகினர். சுரேஷ் மற்றும் தர்ஷினி ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


