News April 2, 2025
பிரபல கொள்ளையர்கள் கைது

ஆட்டோவில் தனியாக பயணிகப்பவர்கள் மற்றும் சாலையில் தனியாக நின்று கொண்டிருக்கும் அல்லது நடந்து செல்பவர்களை குறிவைத்து கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த புகாரில், தண்டயார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் விக்னேஷ் இருவரை கைது செய்தனர். 100 சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சினல்களை ஆய்வு செய்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
Similar News
News January 24, 2026
சென்னையில் சிறப்பு முகாம்

சென்னையில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இன்றும் நாளையும் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
News January 24, 2026
சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 24, 2026
சென்னையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதியான அன்று காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. கௌடியாமடம் ரோடு, ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம். SHARE


