News August 18, 2025
பிரபஞ்சம் மனிதர்களுக்கானது இல்லை: இயக்குநர் வசந்த்

டெல்லியில் தெருநாய்களை பிடித்து, நாய் காப்பகங்களில் ஒப்படைக்க SC உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து சென்னையில் நடந்த பேரணியில், ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த் பங்கேற்றார். நிகழ்வில் பேசிய அவர், பிரபஞ்சம் மனிதர்களுக்கு மட்டுமே இல்லை என்றும், அனைத்து உயிர்களுக்கும் சமமானது என்றார். தெருநாய்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பது அனைத்திற்கும் தீர்வல்ல என்றார்.
Similar News
News December 8, 2025
இரவில் அந்த கனவுகள் வருகிறதா?.. இதுதான் அர்த்தம்

நம்மில் பலருக்கும் இரவில் பேய் துரத்துவது போன்றும், பேய் நம்மை அமுக்குவது போலவும் கனவுகள் வரும். கனவு சாஸ்திரப்படி, கடந்த காலத்தில் செய்த செயலுக்கு நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால் பேய் கனவுகள் வருமாம். கடந்த கால நினைவுகளை மறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையே பேய் கனவுகள் உணர்த்துகின்றன. அதனால், அந்த மாதிரி கனவுகளுக்கு பயப்பட வேண்டாம். SHARE IT.
News December 8, 2025
ED ரகசிய கடிதம் தனிநபருக்கு வந்தது எப்படி?

நகராட்சி நிர்வாக துறையில் முறைகேடு நடந்ததாகவும், இதனை தமிழக DGP விசாரிக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த HC, டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறியது. பின்னர், இது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என TN அரசு தரப்பில் கோரப்பட்டது.
News December 7, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.


