News May 15, 2024
பிரதான அணைகளில் நீர் வெளியேற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பிரதான அணைகளில் நீரும் அதிகரித்து வெளியேற்றப்படுகின்றது . அந்த வகையில் பாபநாசம் அணையில் இன்று (மே 15) காலை நிலவரப்படி 254.75 கன அடி தண்ணீரும் மணிமுத்தாறு அணையில் 245 கன அடி தண்ணீரும் விவசாயத்திற்காக வெளியேற்றப்படுகின்றது.
Similar News
News December 7, 2025
நெல்லை: மகளிர் தொகை ரூ.1 மெசேஜ் வரலையா?

நெல்லை மக்களே, டிச.12 முதல் விடுபட்ட மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. பணம் வருவதற்கான ரூ.1 மெசேஜ் வரலையா? உங்க ஆதார் எண்ணுடன் எந்த வங்கி கணக்கு இணைக்கபட்டு இருக்கிறதோ அந்த வங்கி கணக்கு தான் பணம் வரும். இங்கு <
News December 7, 2025
நெல்லை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்..!

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News December 7, 2025
நெல்லை: தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன் தற்கொலை

விகேபுரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் வேலாயுதம் (25). தாய் அமுதவள்ளியை இழந்து மனமுடைந்த அவர், மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், நேற்று வீட்டில் துர்நாற்றம் வீசியதால், விகேபுரம் போலீசார் கதவை உடைத்து சென்ற போது, வேலாயுதம் மின் விசிறியில் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் இறந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


