News April 9, 2024
பிரதமர் வருகை: கோவையில் ரெட் ஜோன்

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவிற்கு இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News December 10, 2025
கோவைக்கு பெருமை சேர்த்த வீரர்கள்

ஒடிசா சாம்பல்பூரில் 30-வது தேசிய ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி 4 நாட்கள் நடந்தது. கோவையில் இருந்து பங்கேற்ற வீரர் அபினவ் ‘டீம் டைம் டிரயல்’ பிரிவில் வெண்கல பதக்கமும், சப்-ஜூனியர் பிரிவில் வீரர் பிரனேஷ் ‘ரோட் ரேஸ்’ போட்டியில் வெண்கல பதக்கமும், சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் ரோட் ரேஸ் போட்டியில் வீராங்கனை ஹாசினி வெள்ளி பதக்கமும் வென்று தமிழகத்திற்கும், கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
News December 10, 2025
கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை

கோவை வால்பாறையை சேர்ந்த இளைஞர் கார்த்திக், ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள சகோதரி ஐஸ்வர்யா வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனால், உரிய வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
கோவை செம்மொழி பூங்கா: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கோவை செம்மொழி பூங்கா நாளை (டிச.11) திறக்கப்படவுள்ள நிலையில் நுழைவு கட்டண விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ஒருவருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10வயது) ரூ.5 நடைபாதை உபயோகிப்போருக்கு ஒருவருக்கு(மாதாந்திர கட்டணம்) ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு ரூ.25,000 குறும்பட ஒளிப்பதிவு, இதர ஒளிப்பதிவிற்கு ரூ.2000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது


