News May 14, 2024

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறை

image

சுண்டக்குடியை சேர்ந்த விக்னேஷ்குமார் கடந்த 2021 இல் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விக்னேஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Similar News

News December 5, 2025

அரியலூர்: நலம் காக்கும் மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நாளை (டிச.06) நடைபெறுகிறது. மேலும் இந்த மருத்துவ முகாமில் எக்கோ கார்டியோகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் அமைப்புசாரா தொழில் நலவாரிய பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

அரியலூர்: BE போதும் அரசு வேலை ரெடி!

image

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 5, 2025

அரியலூர்: ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

image

தமிழக ஆளுநர் ரவி, தமிழர்கள் குறித்து கூறிய கருத்தை கண்டித்து அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அண்ணாசிலை அருகே நடந்த போராட்டத்துக்கு விடுதலை நீலமேகன் தலைமை வகித்தார். சுபா.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இந்நிகழ்வி திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆளுநரின் பேச்சைத் தீவிரமாக எதிர்த்தனர்.

error: Content is protected !!