News August 8, 2025

பாடாலூர் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை மகன் சாமிநாதன் (36). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு ஆளான சாமிநாதனை அவரது மனைவி கார்த்திகா பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 12, 2025

பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

News November 12, 2025

பெரம்பலூர்: காவல் அலுவலகத்தில் ஐ.ஜி நேரில் ஆய்வு

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜோஷி நிர்மல் குமார், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், தனிப்பிரிவு, குற்ற ஆவணக்கூடம் உள்ளிட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பதிவேடுகளைச் சரிபார்த்தார். ஆய்வின்போது, பணியை மேம்படுத்துவது குறித்து காவலர்களுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 12, 2025

பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500 மதிப்பில் சக்கர நாற்காளிகளை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

error: Content is protected !!