News November 11, 2024
பாஜக நிர்வாகி ஏ.பி.முருகானந்தத்திற்கு பிடிவாரண்ட்

பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், கடந்த 2016ல் மாமனார் சுந்தரசாமி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் விடுத்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அடுத்த வழக்கு விசாரணைக்குள் நீதிமன்றத்தில் முருகானந்தத்தை ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
கோவை அருகே அதிரடி கைது!

சூலூரைச் சேர்ந்த பிரியா என்பவர் நேற்று முந்தினம் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்துச் சூலூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராகவன் (24) மற்றும் ஜெகதீஸ் (31) ஆகிய இருவரையும் நேற்று (நவ. 14) கைது செய்தனர்.
News November 15, 2025
கோவையில் மீண்டும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்’. நிகழ்ச்சி

கோவை மாநகரில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. அதன்படி, வரும் (நவம்பர்.16) ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் தின சிறப்பு ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News November 15, 2025
கோவையில் மாஸ்டர்ஸ் தடகள போட்டி

கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், கோவை நேரு ஸ்டேடியத்தில் வரும் 30ம் தேதி தடகளப் போட்டி நடக்கிறது. இதில் தடை தாண்டுதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல், ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், 30 வயதில் இருந்து 80 வயதுக்கும் மேற்பட்டோர் என, ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம், மேலும் விபரங்களுக்கு 98432 21711 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


