News August 24, 2025

பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம்

image

கிருஷ்ணகிரி பாஜக சார்பில் நகர் பகுதியில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மகளிர் அணி நகர பொறுப்பாளர் விமலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உறுப்பினர் சேர்க்கை, கிளை அமைப்பது, பொறுப்பாளர் நியமனம், மங்கி பாத் நிகழ்ச்சி, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Similar News

News January 14, 2026

கிருஷ்ணகிரி: பசு மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 14, 2026

கிருஷ்ணகிரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

கிருஷ்ணகிரி உழவர் சந்தையின் விலை நிலவரம்

image

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.14) காய்கறிகள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.16-20, உருளை: ரூ.25, பெரிய வெங்காயம்: ரூ.30, மிளகாய்: ரூ.40, கத்திரி: ரூ.18, வெண்டைக்காய்: ரூ.36, பீர்க்கங்காய்: ரூ.22, சுரைக்காய்: ரூ.14, புடலங்காய்: ரூ.26, பாகற்காய்: ரூ.20, அவரை: ரூ.28, கேரட்: ரூ.70, பீன்ஸ்: ரூ.50 என விற்பனை செய்யப்படுகின்றன.

error: Content is protected !!