News August 20, 2024
பாஜகவுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்? கனிமொழி

தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாத பாஜகவுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும் என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுடனான திமுகவின் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்ற கூறிய அவர், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அனைவரிடம் அன்பாக பழகும் முதல்வர் ஸ்டாலின், உரிமைக்காக கலைஞர் போல் போராடக் கூடியவர் என்றும் தெரிவித்தார்.
Similar News
News January 23, 2026
கனமழை எச்சரிக்கை.. 7 மாவட்டங்களில் அலர்ட்

வடகிழக்கு பருவமழை விலகியதாக அண்மையில் IMD அறிவித்தது. ஆனால், தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்லும்போது குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் மக்களே!
News January 23, 2026
2 கொலையாளிகள்.. ஜெயிலில் காதல், பரோலில் திருமணம்!

ராஜஸ்தான் சங்கானேர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் பிரியா சேத் & ஹனுமான் பிரசாத் ஆகியோருக்குள் காதல் மலர்ந்துள்ளது. டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான இளைஞரை பிரியாவும், Ex காதலியின் கணவர் & அவரின் 3 குழந்தைகளை ஹனுமானும் கொலை செய்துள்ளனர். திருமணம் செய்ய முடிவு செய்து ஐகோர்ட்டை அணுக, அவர்களுக்கு 15 நாள் பரோல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
News January 23, 2026
கூட்டணி ஆட்சிக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டாரா EPS?

கூட்டணி ஆட்சி பற்றி தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என பாஜகவினர் கூறிவருகின்றனர். இதற்கு தோதாக EPS இடம் பாஜக 3 இலாகாக்களை கேட்பதாகவும் பேசப்படுகிறது. இதற்கு EPS மறுப்பு தெரிவிக்காததால் டெல்லி தலைமை கூட்டணி ஆட்சியை அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம். இதேபோல அமமுகவுக்கு 1 அமைச்சர் பதவியை வழங்குவது குறித்து ஆலோசனை நடந்துவருவதாக பேசப்படுகிறது.


