News August 24, 2024

பழனி: மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி!

image

பழனி மாநாட்டில் இரண்டு நாள் 30 ஆயிரம் பேர் சாப்பிட வசதியாக ஆங்காங்கே ஸ்டால்கள் & உணவு வழங்கிடவும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் மாணவ, மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளவும், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 450க்கும் மேற்பட்டவர்கள் 2 நாட்கள் சீருடையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதிற்குட்பட்ட மறுவேலைவாய்ப்பு பெற்ற முன்னாள் படைவீரர்களைத் தவிர்த்து, மற்ற முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். திறன் பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்ப விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்தார்.

News November 11, 2025

திண்டுக்கல்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News November 11, 2025

திண்டுக்கல்: பெண்கள் தான் டார்கெட்! மோசடி நபர் கைது

image

பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் தனுஸ் என்ற நபர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன் அப்பெண்ணை மிரட்டி தலா ஒரு பவுன் மோதிரம், ரூ.90,000 பணத்தை பறிமுதல் பெற்றுள்ளார். அப்பெண் அளித்த புகார் படி தனுஷை கைது செய்தனர். விசாரணையில், அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த டிஎஸ்பியின் மகன் என்பது தெரியவந்தது. அவர் பெண்களை குறி வைத்து பணத்தை பறிமுதல் செய்து வந்தது தெரியவந்தது.

error: Content is protected !!