News April 8, 2024
பழனி கோவிலில் குவிந்த பக்தா்கள்

பங்குனி உத்திர திருவிழா, தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக்கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். தீா்த்தக்காவடி எடுத்து வந்த பக்தா்களுக்கு கோயில் சாா்பில் தரிசனத்துக்கு தனிவழி அமைக்கப்பட்டிருந்தது. பழனி கிரிவீதியில் பேட்டரி காா்கள் இயக்கும் பேருந்து பற்றாக்குறையாக இருந்ததால், விடுமுறை நாள்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
Similar News
News December 5, 2025
திண்டுக்கல்: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

திண்டுக்கல் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ்: https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 5, 2025
பழனி அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை!

பழனி அருகே சின்ன கலயமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது தரணீஸ்வரன் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுகிறார். ஆனால் நோய் குணமடையாததால் மன அழுத்தம் அதிகரித்து, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். நெய்காரப்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்து உடனடியாக சம்பவ இடத்தில் சென்று, அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
ஒட்டன்சத்திரம் அருகே உரம் தின்ற ஆடுகள் பலி!

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோர் நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்காக விட்டு வந்த ஆடுகளில், அப்பகுதியில் இருந்த உரம் கலந்த அரிசியை சாப்பிட்ட மூன்று ஆடுகள் மர்மமாக உயிரிழந்தன. தகவல் அறிந்த இடையக்கோட்டை கால்நடை மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை பரிசோதித்துப் புதைத்தனர். இறப்புக்கான காரணம் பின்னர் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


