News February 23, 2025

பழங்குடி கிராமத்தில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை

image

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள பழங்குடியினர் கிராமமான நஞ்சப்பச்சத்திரம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தினசரி மக்கள் உபயோகிக்கும் பாதையில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாடுவதற்கு சிரமப்படுகின்றனர். வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அடர்ந்த வனத்திற்குள் விரட்ட கோரிக்கை விடுத்தனர்.

Similar News

News July 8, 2025

நீலகிரி: குன்னூர் சாலை விபத்தில் ஒருவர் பலி!

image

நீலகிரி: குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனமும் கனரக வாகனமும் மோதிக்கொண்டதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மைக்கேல் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் உபதலையைச் சேர்ந்த இவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன்பர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News July 7, 2025

நீலகிரி: மகளிர் அதிகார மையத்தில் வேலைவாய்ப்பு

image

நீலகிரி மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. மாத ஊதியம் ரூ.12,000-20,௦௦௦ வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜூலை 20, 2025 குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு (0423 2443392) எண்னை அணுகவும்.

News July 7, 2025

நீலகிரி: ரூ.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம்

image

நீலகிரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் மற்றும் 100 % நிலங்களுக்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் . ஷேர் பண்ணுங்க !

error: Content is protected !!