News November 30, 2024
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 10, 2025
மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளன. மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – 044-25619523 திருவள்ளூர் – 7305158550 செங்கல்பட்டு – 044-295417115 காஞ்சிபுரம் – 044-27237107 தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த கணக்கிட்டு படிவம் தொடர்பான சந்தேகங்களை தொடர்பு கொண்டு அறியலாம்.
News November 10, 2025
தனியார் மருத்துவமணை உரிமம் பதிவு கட்டாயம்!

சென்னை மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்களின் கீழ் உரிமம் பதிவு செய்யாத தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்வது கட்டாயம் என ஊரக மருத்துவ நலப்பணி அமைப்பகம் தெரிவித்துள்ளது பதிவு செய்யாத மருத்துவமணை 2026 ஜுன் மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் கால அவகாசம் கொடுக்கப்படாது உரிமம் பெற்று பதிவு செய்த மருத்துவமணை 5 ஆண்டுகள் மட்டுமே அவை செல்லும் மீண்டும் புதுபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
விருதுகளை அள்ளிய தமிழக அரசு

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இரண்டு முக்கிய விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயிலுக்கான நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது மற்றும் சிறந்த பயணிகள் சேவைக்கான பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விருதுகள் நவம்பர் 9 அன்று ஹரியானா குருகிராமில் நடைபெற்ற மாநாட்டில் வழங்கப்பட்டது.


