News November 30, 2024
பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

ஃபெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 11, 2025
தி.மலை மகா தீபம் தேதி அறிவிப்பு!

தி.மலையில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 24-கொடியேற்றம், நவம்பர் 27-வெள்ளி கற்பக விருட்சம் & வெள்ளி காமதேனு வாகனம், நவம்பர் 28-வெள்ளி ரிஷப வாகனம், நவம்பர் 29-வெள்ளி ரதம், நவம்பர் 30-பஞ்சமூர்த்திகள் மகா ரதம், டிசம்பர் 3-காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் நடைபெறவுள்ளது. மகா தீபம் நடைபெறும் தேதியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க.
News November 11, 2025
தி.மலையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

தி.மலை: மழையூர் துணை மின்நிலையத்தில் பராமாரிப்பு பணிகள் இன்று (நவ.11) நடைபெறவுள்ளது. இதனால், காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மழையூர், பெரணமல்லூர், தென்னாத்தூர், விசாகுளத்தூர், ஆணைபோகி, தேசூர், மேலச்சேரி, கடம்பை, மடம், தவனி, விசாமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 11, 2025
தி.மலை: ஆற்றில் மூழ்கி பலியான பள்ளி மாணவன்!

ஆரணி கோட்டை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ரவி-சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு சுனில்ராஜ் (11) என்ற ஒரு மகனும் உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் கமண்டல நதியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நேற்று (நவ.10) உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


