News January 13, 2026
பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன.15 – 18 வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், போகிப் பண்டிகையை கொண்டாட ஏதுவாக நாளையும் (ஜன.14) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் & அரசு அலுவலகங்களுக்கு 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.31-ல் அரசு அலுவலகங்கள் செயல்படும்.
Similar News
News February 10, 2026
ஜான் பாண்டியனால் கூட்டணி மாறும் கிருஷ்ணசாமி?

NDA-வில் இணைந்துள்ள ஜான் பாண்டியன், இந்த முறை தென்மாவட்டத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, ஓட்டப்பிடாரம் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்க பாஜக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதே தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் இணைவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், தவெக பக்கம் செல்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறாராம்.
News February 10, 2026
தேர்தலுக்கு புதிய ப்ளானை போடும் பாஜக, RSS

வரும் தேர்தலில் அரசியல் கட்சிகள் இதுவரை இல்லாத பல மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீமான், விஜய் பக்கம் இளைஞர்களின் வாக்கு செல்வதை தடுக்க, இந்த தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் இடம் ஒதுக்க திமுக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடந்த RSS – பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது.
News February 10, 2026
பிப்ரவரி 10: வரலாற்றில் இன்று

1969 – பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு மு.கருணாநிதி முதல்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற நாள்.
1928 – மலையாளத் திரையுலகின் முதல் தலித் திரைப்பட கதாநாயகி பி.கே.ரோஸி பிறந்த தினம்
1919– நடிகர் சு. ராஜம் பிறந்த தினம்
1984- இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பிறந்த தினம்
1985 – பாடகி மகதி பிறந்த தினம்
2024- இயக்குநர், பாடலாசிரியர் திருமாறன் மறைந்த தினம்


