News April 30, 2024

பறவைகளுக்கு குடிநீர்

image

ஈரோடு மாவட்டம் பவானி நகர் மன்ற தலைவர் சிந்துரி இளங்கோ தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இன்று நம்மை சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். என்று பவானி பூங்கா மற்றும் பவானியில் பறவைகள் நிறைந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளையும் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News

News December 13, 2025

ஈரோடு: பெண்களுக்கு இலவச தையற்கலை பயிற்சி

image

சித்தோடு, அரசினர் பொறியியல் கல்லூரி சாலை, வாசவி காலேஜ் அருகில் செயல்படும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும் 20-12-2025 முதல் 31-01-2026 வரை நடைபெற உள்ளது. இதில், பயிற்சி, சீருடை, உணவு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 87783-23213, 72006-50604, 0424-2400338 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

ஈரோடு:பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <>TN nilam citizen portal<<>> தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு!

image

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபண்ணாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான குண்டம் திருவிழா தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டு மார்ச் 16 பங்குனி 2-ம் நாள் திங்கட்கிழமை பூச்சாட்டு விழா ஆரம்பம். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறுபூஜை (6-4-26) அன்று நடைபெறவுள்ளது.

error: Content is protected !!