News August 21, 2024
பரம்பிக்குளம் அணை உபரிநீரை வெளியேற்ற திட்டம்

72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 71 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அணையின் மொத்த நீர்க்கொள்ளளவான 17.820 டிஎம்சியில் 17.589 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. பரம்பிக்குளம் அணை நிரம்பி நீர் ததும்பும் நிலையில் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அபரிமிதமாக இருந்தால், பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக உபரிநீரை வெளியேற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Similar News
News January 17, 2026
உஷார்..கோவையில் மின் தடை அறிவிப்பு!

கோவை: மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், மோளக்காளிபாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, சந்திராபுரம், முத்துக்கவுண்டன் புதூர் மற்றும் வலையபாளையத்தின் சில பகுதிகள், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது
News January 17, 2026
அன்னூர்: கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி!

அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வரும் செல்லமுத்து(30), ஊருக்குச் செல்வது தொடர்பாக மனைவி காயத்ரியுடன்(29) தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த காயத்ரி, கொதிக்கும் எண்ணெயைக் கணவன் மீது ஊற்றினார். இதில் படுகாயமடைந்த செல்லமுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 16, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


