News May 1, 2024
பரமக்குடி: மினி பேருந்து மோதி வாலிபர் பலி

பரமக்குடி அருகே வெங்கிட்டங்குறிச்சி சேர்ந்த ஞானபிரகாசம் மகன் ஆனந்த பிரபாகரன் (18). இன்று மாலை தாத்தா திரவியம் என்பவரை அழைத்து வர டூவிலரில் பரமக்குடி பஸ் நிலையம் நோக்கி சென்றார். கிருஷ்ணா தியேட்டர் அருகே மினி பேருந்து பின் சக்கரம் ஏறி தலை நசுங்கி ஆனந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து டிரைவர் கார்த்திக் (41) என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
பாம்பன் பாலத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சாலை பாலத்தில் இன்று (டிச.15) இரவு 8:15 மணியளவில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.15) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.