News June 19, 2024
பரபரப்பில் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு

தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறை தங்களையும் இணைத்துக் கொள்ள தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக வாதாட இன்று தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி உள்ளார். இந்நிலையில் அமலாக்க துறை வழக்கறிஞர் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாதாடி வருகிறார்.
Similar News
News January 21, 2026
தூத்துக்குடியில் மேலும் 5 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கூடுதலாக மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலைய ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.
News January 21, 2026
தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.21) கிழக்கு மண்டல பகுதி மக்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.