News January 11, 2025

பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் தருமபுரி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்து, துறை அலுவலர் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

Similar News

News November 13, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவர்மன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன், தோப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் கண்ணன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

News November 12, 2025

தருமபுரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 04.ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள 12,85,432 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிரப்புவதில் சந்தேகம் இருந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.

News November 12, 2025

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கம்!

image

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (நவ.12) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசுத் துறை அலுவலர்கள் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!