News November 11, 2024
பயிர் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்

வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி கூறுகையில், ”இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு. நஷ்டத்தை தவிர்க்க பயிர் காப்பீடு செய்வது அவசியம். நெல், பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் நகலுடன் அருகேயுள்ள பொதுச் சேவை மையங்கள், கூட்டுறவு வங்கி கிளைகளில் காப்பீடு செய்யலாம். இதற்கு நவம்பர் 15 கடைசி” என்றார்.
Similar News
News November 9, 2025
மதுரை : 12th PASS – ஆ…? அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: தமிழக அரசு
2. காலியிடங்கள்: 1429
3. கல்வித் தகுதி: 12th, + 2 ஆண்டு சுகாதார பணியாளர் படிப்பு சான்றிதழ்
4.சம்பளம்.ரூ.ரூ.19,500 – ரூ.71,900
5. கடைசி நாள்: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 9, 2025
மாநில அளவில் முதலிடம் பிடித்த மதுரை காவல் நிலையம்

தமிழகத்தில் தொலைந்து போன செல்போன்களை விரைவாக செயல்பட்டு பதிவு செய்து அதை மீட்டுக் கொடுத்து, மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்த மதுரை உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் ஏடிஜிபி சந்தீப் மித்தல், இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘DOT-CEIR’ என்ற சிறந்த விருதை வழங்கினார். இதனை மதுரை சைபர் க்ரைம் எஸ்ஐ விஜயபாஸ்கர், உசிலம்பட்டி தலைமை காவலர் ராம்குமார் பெற்றனர்.
News November 9, 2025
மதுரை: நவ.11 இங்கெல்லாம் மின்தடை

11.11.2025 (செவ்வாய்கிழமை) காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை, அவனியாபுரம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. மண்டேலா நகர், பாப்பாகுடி, அவனியாபுரம் பஸ்டாண்ட் மார்க்கெட், திருப்பரங்குன்றம் ரோடு, பாம்பன் நகர், வெள்ளக்கல், பர்மாகாலனி, சின்ன உடைப்பு, விமானநிலையம் ஆகிய பகுதிகளில் மின் தடை.


