News January 15, 2025
பன்றிகளை திரியவிட்டால் நடவடிக்கை என்று எச்சரிக்கை

புதுவை ஆணையர் ரமேஷ் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில். வில்லியனுார் நகர பிரதான சாலைகள் & அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே பன்றி வளர்ப்போர் தங்கள் கண்காணிப்பில் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். தவறினால் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
வில்லியனூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

வில்லியனுர் – மரப்பாலம் மின்பாதையில் இன்று (நவ.11) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தக்ககுட்டை, திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், மூலகுளம், உழவர்கரை, சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News November 10, 2025
புதுவை பி.எஸ்.என்.எல் டெண்டர் அறிவிப்பு

புதுவை பி.எஸ்.என்.எல் சார்பில் வில்லியனூர், மேட்டுப் பாளையம் பகுதிகளில் வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை நிர்வகிக்க விருப்பமுள்ள வணிக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ டெண்டர் போர்டல் http://www.etenders.gov.in/eprocure/app (அ) http://bsnl.co.in/tenders/tenderlivesearch என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


