News August 22, 2024
பனையூரில் தவெக கொடியை அறிமுகம் செய்யும் விஜய்

சென்னை அருகே பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிடுகிறார். கட்சி அலுவலகத்தில் உள்ள 40 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் தனது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
செங்கல்பட்டு இரவு பணி காவலர்கள் விபரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசரத் தேவை உள்ள நேரங்களில் மேற்கண்ட பட்டியலில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்..
News November 14, 2025
செங்கல்பட்டு: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


