News May 15, 2024
பத்தாம் வகுப்பில் மாணவனுக்கு பாராட்டு

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் காஞ்சி மாவட்டம் பிள்ளையார்பாளையம், மதனபாளையம் தெருவில் வசிக்கும் எஸ்.எஸ்.கே.வி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவன் யுகேஷ் செல்வன் 495/500 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பிடித்ததையொட்டி காஞ்சி மாவட்ட அ.தி.மு.க.மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் மாணவன் வீட்டிற்கே சென்று பாராட்டினார்.
Similar News
News December 12, 2025
காஞ்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
காஞ்சிபுரத்திலேயே சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY

காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மேனிபோல்ட் டெக்னீஷியன், ஈ.சி.ஜி.டெகினீஷியன், லிப்ட் மெக்கானிக், சைட்டோ டெக்னீஷியன், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், பாய்லர் மெக்கானிக், இரத்தவங்கி ஆலோசகர், செவிலியர் உதவியாளர், சமையலாளர், சலவையாளர், டயட்டீஷியன், ரேடியோகிராபர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விவரங்களுக்கு <
News December 12, 2025
காஞ்சிபுரம்: பைக் மோதி துடிதுடித்து பலி!

குன்றத்தூர் அடுத்த சோமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(50). கட்டடத் தொழிலாளியான இவர், நேற்று(டிச.11) மோட்டார் சைக்கிளில் குன்றத்தூரில் இருந்து சோமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பூந்தண்டலம் பகுதியில் எதிரே வந்த ஏழுமலை(32) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


