News August 23, 2025
பதவி பறிப்பு மசோதா குறித்து நாராயணசாமி கருத்து

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பதவி பறிப்பு சட்ட மசோதா நடைமுறைக்கு பொருந்தாது. எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. கடந்த தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு தான் மோடி அரசு பதவிக்கு வந்தது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
Similar News
News January 20, 2026
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு

புதுவையில் இன்று (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டமங்கலம் கோட்டம், திருச்சிற்றம்பலம் துணை மின் நிலைய உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். இதனால் திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இவ்வாராக மின் பகிர்மான கழகத்தின் கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News January 20, 2026
புதுவை: முதல்வர் மீது பாஜக அமைச்சர் கடும் அதிருப்தி

புதுச்சேரி மாநிலத்தில், பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், பாஜக-வை சேர்ந்த அமைச்சர் ஜான்குமார் தனக்கு இலாகா ஒதுக்கப்படாதது குறித்து, முதலமைச்சர் ரங்கசாமி மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனக்கு இலாகா வழங்கக்கூடாது என்பதில் ஏதோ ஒரு சதி நடக்கிறது என, செய்தியாளர்களிடம் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
News January 19, 2026
புதுவை: துயரம் நீக்கும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர்

புதுவை மாநிலம் காரைக்காலில், சோழர்களால் கட்டப்பட்ட கோயில் தான் இந்த திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு உற்சவராக வேடமூர்த்தி உள்ளார். இது சோழ நாட்டின் 49-வது சிவத்தலமாகும். சிவனின் மகனான ஐயப்பன் இங்கு இரண்டு மனைவிகளுடன் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனும், சிவனும் கையில் வில்லுடன் காட்சி தருகின்றனர் அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கும் என்பது ஐதிகம்.


