News January 12, 2025
பணம் இரட்டிப்பு மோசடி: தந்தை மகன் கைது

ஆறுமுகமங்கலம் அருகே ஏரலை சேர்ந்தவர் லிங்கராஜ். இவரிடம் புங்கவர் நத்தம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் அவரது மகன் அய்யாதுரை ஆகியோர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக லிங்கராஜ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தன் பேரில் போலீசார் விசாரணையில் அவர்கள் பல பேரிடம் ரூபாய் 2 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 7, 2025
தூத்துக்குடி: தாசில்தார் எண்கள்.. SAVE பண்ணுங்க.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாசில்தார் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது.
1.தூத்துக்குடி-0461-2321448
2.ஸ்ரீவைகுண்டம்-04630-255229
3.திருச்செந்தூர்-04639-242229
4.சாத்தான்குளம்-04639-266235
5.கோவில்பட்டி-04632-220272
6.ஓட்டப்பிடாரம்-0461-2366233
7.எட்டயபுரம்-04632-271300
8.விளாத்திகுளம்-04638-233126
9.ஏரல்-04630-270055. SHARE பண்ணுங்க.
News November 7, 2025
தூத்துக்குடி மீனவர்களுக்கு ஒரு நற்செய்தி

தமிழக முதலமைச்சரின் சார்பில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டம் தொடங்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 10000 மீனவர்கள் பயன்பெறுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தனது செய்தி குறிப்பு மூலம்தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
தூத்துக்குடி: அரசு தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 645 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மூலம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த முதன்மை தேர்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 10-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


