News August 24, 2024
பட்டுக்கூடு 264 கிலோ ரூ.1.28 கோடிக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, நேற்று நடந்த ஏலத்தில், 264.5 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 518 ரூபாய், குறைந்தபட்சம், 473 ரூபாய், சராசரி, 483.88 ரூபாய் என, 1.28 கோடி ரூபாய்க்கு விற்பனையானது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
நாமக்கல்: 10-வது படித்தால் அரசு வேலை.. நாளை கடைசி!

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நாளை நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதை சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 8, 2025
நாமக்கல்: ரேஷன் கார்டு இருக்கா? இன்று மிஸ் பண்ணாதீங்க!

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் இன்று (நவ.8) நடைபெறுகிறது. அனைத்து தாலுகாக்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் இருக்கும் வட்ட வழங்கல் பிரிவில் (காலை 10 – மதியம் 1 மணி வரை) நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், பெயர் திருத்தம், செல்போன் எண் பதிவு, புதிய குடும்ப அட்டை கோருதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் ஐந்து காசு உயர்ந்து ஒரு முட்டை விலை 5.60 காசுகளாக உயர்ந்துள்ளது நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை திருச்செங்கோடு சாலை அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோலி பண்ணையாளர்கள் கலந்து கொண்டு முட்டை வலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்த காரணத்தால் 5 காசுகள் உயர்ந்து முட்டைகளை 5.60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை!


