News April 25, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
Similar News
News November 8, 2025
நாகை: டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர்ல் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாகை டாஸ்மாக் அலுவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் ஒரு வார காலத்தில் கடையை காலி செய்வதாகவும், அது வரை கடை மூடப்பட்டிரும் என உறுதி அளித்ததையெடுத்து, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
News November 8, 2025
நாகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233176>>பாகம்<<>>-2)
News November 8, 2025
நாகை: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் (2/2)

1.கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2.ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3.ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4.ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
4.விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..


