News January 14, 2025
படாளம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் மின்சாரக் கிளை வாரியத்தில் பணியில் இருந்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் 25 என்பவர் உயர் மின் கம்பத்தில் பனைமரம் ஓலை உரசி வந்த நிலையில் அதை வெட்டுவதற்கு மின்சாரம் துண்டிக்காமல் அப்படியே மின்கம்பத்தில் ஏறிபழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
செங்கல்பட்டு இரவு ரோடு செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் நவ (10) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 10, 2025
செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
செங்கல்பட்டு: 1945 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டம்

மதுராந்தகம் தாலுகாவில் உலகளாவிய நகரம் அமைக்கும் திட்டத்திற்காக 1,945.19 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்த பிரம்மாண்ட நகரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், அதிநவீன உட்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இடம் பெறும். இதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என TIDCO நிர்வாக இயக்குனர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


