News November 30, 2024
பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு திறப்பு

நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் இன்று காலை இளம் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் செந்தில்நாதன் குத்துவிளக்கு ஏற்றி இளம் பச்சிளம் குழந்தை பிரிவை தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 7, 2025
நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் வராது!

மயிலாடுதுறை – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரதான நீருந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதனை சரி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நவம்பர் 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று தேதிகளில் நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி, கீழ்வேளுர், கீழையூர், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.!
News November 6, 2025
நாகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

நாகை மாவட்ட மக்களே, உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


