News February 23, 2025

பச்சமலை முருகன் கோயில்!

image

ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள பச்சமலை என்ற சிறிய குன்றில், புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. வேண்டுவோருக்கு, வேண்டுவன தந்து, அருள்பாளிக்கும் இளம் குமரனை, துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்தாராம். அனைத்து தடைகளையும் போக்கும் சர்வ வல்லமை கொண்ட, பச்சமலை முருகனை வழிபட்டால், திருமணமாகி, நீண்ட நாட்களாக குழந்தைப்பெறு கிட்டாமல் இருப்பவர்களுக்கு, நிச்சயம் குழந்தை வரம் கிடைக்குமாம்.

Similar News

News July 8, 2025

ஈரோடு: திருவிழா பூச்சாட்டுதலுடன் ஆரம்பம்

image

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கேசரிமங்கலம் கிராமம் சேகண்டியூர் பகுதியில் அமைந்துள்ள குட்ட முனியப்பன் கோவில், ஆடி 1 பொங்கல் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதில் இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த, குட்ட முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டனர்.

News July 7, 2025

ஈரோடு: சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்

image

ஈரோடு அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுவன், கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு கடித்து, சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிறுவனுக்கு பாம்பு விஷமுறிவு மருந்து 20 பாட்டில்கள் செலுத்தி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் 72 மணி நேரத்திற்கு பின் சிறுவனுக்கு நினைவு திரும்பியது. சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்களை, சிறுவனின் பெற்றோர் பாராட்டினர்.

News July 7, 2025

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் கிராம உதவியாளர் பணி !

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 141 பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974615>>தொடர்ச்சி<<>> (1/2)

error: Content is protected !!