News June 17, 2024

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் எதிரில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் டவுன்ஹாலில் மற்றும் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஈகை திருநாளை வாழ்த்துக்கள் சொல்லி பரிமாறி கொண்டனர்.

Similar News

News January 16, 2026

கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News January 16, 2026

கடலூர்: கஞ்சா விற்ற 3 பேர் கைது

image

ரெட்டிச்சாவடி எஸ்.ஐ எழிலரசி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கடை பைபாஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது ரோஹித் (18), சக்திவேல் (18), மனோஜ் குமார் (23) ஆகியோர் கஞ்சா விற்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News January 16, 2026

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.15) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!