News April 1, 2025
பகுதி நேர வேலை வாய்ப்பு எனக்கூறி 2.35 லட்சம் மோசடி

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன். இவரை டெலிகிராம் செயலியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளதாகவும், வீட்டிலிருந்தபடி சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய சபரிநாதன் மா்ம நபா் கூறியபடி ரூ.2.35 லட்சத்தை பல தவணைகளில் அனுப்பி ஏமாந்தார். அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
Similar News
News January 21, 2026
புதுவை: சொந்த வீடு கட்டும் கனவு நனவாக வேண்டுமா?

புதுவை மாநிலம் வில்லியனுரில் திருக்காமீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சொந்தமாக புதிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவரான திருக்காமீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 21, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News January 21, 2026
புதுவை: போக்ஸோ வழக்கில் வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

புதுவை மாநிலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆடியபாதம் (39). இவர் 2013-ம் ஆண்டு போக்ஸோ (POCSO) வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து, தற்போது தலைமறைவாக உள்ளார். அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் வீட்டில் இல்லாததால், வரும் 23-ம் தேதி காலை 10:00 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


