News November 12, 2025
நேரடி வரி வருவாய் ₹12.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரையிலான, நேரடி வரி வருவாய் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி வருவாய் 7% அதிகரித்து ₹12.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.08 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ₹25.20 லட்சம் கோடியாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7% அதிகமாகும்.
Similar News
News December 6, 2025
12 மாவட்டங்களில் மழை பொழியும்: IMD

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் வாகனம் ஓட்டுவோர் மிகுந்த கவனத்துடன் பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News December 6, 2025
திருப்பரங்குன்றம் சர்ச்சை.. CM ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

மக்களின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துவதை தவிர்த்து, இந்துக்களின் உணர்ச்சிகளை புண்படுத்துவதில் CM ஸ்டாலின் கவனம் செலுத்துவதாக தமிழிசை சாடியுள்ளார்.<<18474670>> திருப்பரங்குன்றம் விஷயத்தில்<<>> பாஜகவை CM சூசகமாக சாடிய நிலையில், அதை தமிழிசை விமர்சித்துள்ளார். மாநகராட்சி ஊழலில் மேயர் ராஜினாமா, மாசடைந்த வைகை நீர் பற்றிய HC-ன் கருத்தை சுட்டிக்காட்டி, இதுதான் உங்கள் வளர்ச்சியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 6, கார்த்திகை 20 ▶கிழமை: சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 9.30 PM – 10.30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


