News November 19, 2024
நெல் பயிருக்கு காப்பீடு செய்ய தேதி நீட்டிப்பு

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு, பெரியகுளம், தேனி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ராபி சிறப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி தேதி நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

தமிழ்நாடு அரசு 1995ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பணிபுரிந்தவர்களுக்கு “தந்தை பெரியார் சமூக நீதி விருது” வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற https://theni.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக 18.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
தேனி: இந்தியன் ஆயிலில் 2757 காலியிடங்கள்., NO EXAM

தேனி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News December 11, 2025
ITI-யில் சான்றிதழ் பெறாதவர்களுக்கு அழைப்பு

தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் 1964 முதல் 2019 வரை பயிற்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்ற சான்றிதழ், தோல்வியடைந்தவர்கள் மதிப்பெண் பட்டியல்கள் வாங்கி செல்லாமல் உள்ளனர். சான்றிதழ்கள் பெற விரும்புவோர் ஐ.டி.ஐ., வேலை நாட்களில் உரிய ஆவணங்கள் சமர்பித்து சான்றிதழ்களை பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55765 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல் தெரிவித்துள்ளார்.


