News April 30, 2024

நெல்லை மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று (ஏப்.29) 101.3° பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்

Similar News

News December 9, 2025

நெல்லை: தாய் கொலை வழக்கில் மகனுக்கு மிரட்டல்!

image

சிவந்திப்பட்டி நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (39). 2020-ல் இவரது தாய் மாரியம்மாளை சொத்து பிரச்னையால் உறவினர் மைனர்முத்து (43) கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் ஆறுமுகம் முக்கிய சாட்சியாக உள்ளார். சில தினங்களுக்கு முன் ஆறுமுகம் வீட்டுக்கு வந்த மைனர்முத்து, “கோர்ட்டுக்குப் போய் சாட்சி சொல்லக்கூடாது” என அரிவாள் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் மைனர் முத்துவை கைது செய்தனர்.

News December 9, 2025

நெல்லை: மயங்கி விழுந்த விவசாயி பலி

image

நெல்லை, திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெள்ளத்துரை (50). இவருக்கு நீண்ட நாட்களாக இதய நோய் இருந்து வந்தது. நேற்று தனது வயலுக்கு சென்ற போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

நெல்லை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY

image

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!