News November 13, 2025
நெல்லை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

திருநெல்வேலி மகாராஜா நகர் பகுதியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை சுற்றி இரவு நேரத்தில் மர்ம நபர் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விட்டதான தகவலும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி எந்த வெடிகுண்டு மிரட்டலும் இல்லை என விளக்கம்.
Similar News
News December 16, 2025
நெல்லை: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

திருநெல்வேலி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News December 16, 2025
நெல்லை முன்னாள் துணை மேயர் மறைவு

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக துணை மேயரும், தற்போதைய 30வது வார்டு கவுன்சிலருமான P.ஜெகநாதன் என்ற கணேசன் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவு குறித்து அதிமுக நெல்லை மாவட்ட செயலாளார் தச்சை N.கணேச ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர்.
News December 16, 2025
நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு.. சிறுவர்கள் கைது

வி.கேபுரம் அருகே அம்பலவாணபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மதன் (21) என்பவரின் விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 4 சிறுவர்கள் மற்றும் மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சிறுவன் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.


