News April 30, 2024

நெல்லை நகரில் போக்குவரத்து முடக்கம்

image

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் இன்று (ஏப்.30) காலை ஒரு லாரி திடீரென பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நெல்லை தென்காசி மார்க்கத்தில் இருவழியிலும் செல்லும் வாகனங்கள் சுமார் 5 கிமீ தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. அதன்பின் அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நெல்லை நகரில் போக்குவரத்து முடங்கியது.

Similar News

News December 17, 2025

நெல்லை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்! APPLY

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News December 17, 2025

நெல்லை: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

image

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவுசெய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்

News December 17, 2025

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு!

image

டிசம்பர் மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தற்போது மாற்றி வைக்கப்பட்டு 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.

error: Content is protected !!