News June 19, 2024
நெல்லை: திமுக மாணவர் அணி பொறுப்புகளுக்கு நேர்காணல்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நாளை(ஜூன் 20) காலை 8.30 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு நேற்று(ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News January 15, 2026
நெல்லை: துப்பாக்கி விற்பனையில் மேலும் 2 பேர் கைது

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையை சேர்ந்த திமுக பிரமுகரான ரத்தினம் பாலா(40) துப்பாக்கி பதுக்கி விற்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அமீர் சுகைல், முசாம்பீர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் விரைந்த போலீசார் சாகுல் ஹமீது, சிக்கந்தர் ஷேக் ஒலி ஆகியோரை கைது செய்தனர்.
News January 15, 2026
நெல்லை மாநகரில் 600 போலீசார் குவிப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக 600 போலீசார் நெல்லை மாநகர பகுதிகளில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.