News October 15, 2025
நெல்லை: களக்காடு தலையணையில் தடை

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து விபரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
நெல்லையில் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்படுவதற்கான தீர்மானம் இன்றும் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். குறிப்பாக அதிமுக சார்பில் மாநகராட்சியின் குடிநீர் கட்டண உயர்வு முடிவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 10, 2025
நெல்லை போலீஸ் தேர்வில் 691 பேர் ஆப்சென்ட்

நெல்லையில் போலீஸ் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு அமைதியாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் அனுமதிக்கபட்ட 4905 பேரில் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட 4214 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்காதவர்கள் 691 பேர் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
News November 10, 2025
நெல்லை: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

நெல்லை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


