News October 12, 2025

நெல்லை: இதை செய்ய தவறினால் PAN கார்டு செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 14, 2025

நெல்லை: ECR ல் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்

image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே, நவ்வலடி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று (டிச.13) இரவு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த இருவர், திடீரென ஆத்தங்கரை பள்ளிவாசல் என்னுமிடத்தில், திடீர் விபத்து ஏற்பட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

நெல்லை மக்களே மழை நேரத்தில் இது ரொம்ப முக்கியம்.!

image

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News December 14, 2025

நெல்லை காவல் சரகத்தில் 25 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்.!

image

திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட நெல்லை மாநகர், நெல்லை மாவட்டம், தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் பணியாற்றும் 25 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11பேர் மாநகர காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாநகரப் பகுதியைச் சேர்ந்த 14 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!