News April 8, 2024
நெல்லை: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 17, 2025
நெல்லை: கம்மி விலையில் கார், பைக் வேணுமா?

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டம் முன்னாள் படைவீர நல அலுவலகத்தில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள வாகனம் வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு படைவீரர் நல அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் வருகிற 24-ஆம் தேதி வரை நேரில் பார்வையிட்டு ஆதார் அட்டை உடன் முன்பணம் செலுத்தி பெயர் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
நெல்லை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 17, 2025
நெல்லை: தேர்வு தேதியில் மாற்றம் – கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 13, 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த தேர்வு நிர்வாக காரணங்களால் வருகிற 27 மற்றும் 28ஆம் தேதிகளில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த மையத்தில் விண்ணப்பதாரர்கள் இது தொடர்பான விபரம் மற்றும் நிலவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


