News October 1, 2025
நெல்லையில் பூக்களின் விலை கடும் உயர்வு

ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு நெல்லையில் மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.1,800 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாமந்தி, கனகாப்பரம், முல்லை, பிச்சி, மல்லி என பல்வேறு பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலை அதிகமாக உயர்ந்தாலும் பூக்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது
Similar News
News December 15, 2025
நெல்லை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 15, 2025
நெல்லையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 15, 2025
நெல்லை வந்த வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கற்கள் வீச்சு

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை நோக்கி நேற்று புறப்பட்டது. அந்த ரயில் நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்ற போது மர்மநபர்கள் ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்தடுத்த பெட்டிகளின் 5 கண்ணாடிகள் உடைந்தன. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


