News March 26, 2024
நெல்லைக்கு இன்று வருகை தரும் பிரபலம்

பிரபல தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஹரி நாடார் இன்று (மார்ச் 26) காலை நெல்லைக்கு வருகை தருகின்றார். அவர் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு காலை 9 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கராத்தே செல்வின் நாடார் நினைவு இடத்தில் சென்று மலர் அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.
Similar News
News November 7, 2025
நெல்லை: வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

திருக்குறுங்குடி சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (30), வெளிநாட்டில் கட்டடத் தொழிலாளியாக இருந்து விடுமுறைக்கு வந்தவர். இவர் மது அருந்திவிட்டு மனைவி லட்சுமியுடன் சண்டையிட்டதால், அவர் குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்குச் சென்றார். இதனால் மனமுடைந்த செல்வக்குமார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் விசாரணை.
News November 7, 2025
சவுதியில் சேவையாற்ற வாய்ப்பு – நெல்லை ஆட்சியர்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில்; 2026 ஆம் ஆண்டு புனித ஹச் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹச் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹச் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப விண்ணப்பிக்கலாம். தற்காலிக பணி காலம் சுமார் 2 மாதம் மத்திய மாநில அரசு ஊழியர்கள் துணை ராணுவ படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
News November 7, 2025
நெல்லை: வினாத்தாள் மாறியதால் தேர்வில் குழப்பம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடந்த பி.காம் அரியர் தேர்வில் வினாத்தாள் குழப்பம் ஏற்பட்டது. 3ம் ஆண்டு மாணவர்களுக்கு ‘மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்’ தேர்வுக்கு பதில் தவறுதலாக ‘ரீடைல் மார்க்கெட்டிங்’ வினாத்தாள் வழங்கபட்டது. பின்னர் சரியான வினாத்தாள் தரபட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக தேர்வு நடந்தது. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கபட்டதாகவும் பல்கலை வட்டாரம் கூறியது.


