News August 23, 2025
நெல்லைக்கு அமைச்சர் நேரு திடீர் வருகை

நெல்லைக்கு நேற்று இரவு நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். இவரை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில், துணை மேயர் ராஜூ உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் வந்துள்ளார்.
Similar News
News January 24, 2026
நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

நெல்லை மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News January 24, 2026
நெல்லை: கார் மோதி பரிதாப பலி!

நாங்குநேரி கோர்ட்டு பகுதியை சேர்ந்த சன்முகசுந்தரம் (38) நாங்குநேரி சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றினார். இவர் டூவீலரில் நங்குநேரி நம்பி நகர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
நெல்லை: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூர் பகுதியை சேர்ந்த முஸ்தபா மகன் கலீல் ரகுமான்(50). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பெண் கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரகுமானை கைது செய்தனர்.


