News July 15, 2024
நெசவாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கரூரில் கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டுமா? ஈஸியாக வாங்கலாம்

கரூர் மாவட்டத்தில் வரும் 12 காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. ▶️கரூர் ▶️அரவக்குறிச்சி ▶️மண்மங்கலம் ▶️புகழூர் ▶️குளித்தலை, ▶️கிருஷ்ணராயபுரம் ▶️கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல் மேலும் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News July 10, 2025
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு!

புகளூர் காகித ஆலையின் முன்பு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டம் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உட்பட பலர் மீது நேற்று வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News July 10, 2025
கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். (<<17016081>>மேலும் தகவலுக்கு<<>>)